எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஐபிஎல் போட்டியிலிருந்து நான்கு இங்கிலாந்து வீரர்கள் விலகல்

ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோருக்கு அடுத்ததாக ஜானி பேர்ஸ்டோ, கிறிஸ் வோக்ஸ், டேவிட் மலான், பட்லர் ஆகிய இங்கிலாந்து வீரர்களும்...

News image
பேர்ஸ்டோ
Updated On :11 செப்டம்பர் 2021, 12:52 pm

DIN

ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோருக்கு அடுத்ததாக ஜானி பேர்ஸ்டோ, கிறிஸ் வோக்ஸ், டேவிட் மலான், பட்லர் ஆகிய இங்கிலாந்து வீரர்களும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள்.

கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. 

இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ்,  ஆர்ச்சர் ஆகியோர் ஐபிஎல் போட்டியிலிருந்து ஏற்கெனவே விலகிவிட்டார்கள். இந்நிலையில் ஜானி பேர்ஸ்டோ (சன்ரைசர்ஸ்), கிறிஸ் வோக்ஸ் (தில்லி கேபிடல்ஸ்), ஜாஸ் பட்லர், டேவிட் மலான் (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஆகிய இங்கிலாந்து வீரர்களும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள்.

ஐபிஎல் போட்டிக்குப் பிறகு டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் என நான்கு மாதங்களுக்குத் தொடர்ச்சியாக விளையாடி, கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டிய நிலைமை உள்ளதால் ஐபிஎல் போட்டியிலிருந்து இவர்கள் விலகியுள்ளதாக அறியப்படுகிறது. இதர இங்கிலாந்து வீரர்களான மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், சாம் கரண், டாம் கரண், ஜார்ஜ் கார்டன், இயன் மார்கன், கிறிஸ் ஜார்டன், அடில் ரஷித், லியம் லிவிங்ஸ்டன், ஜேசன் ராய் ஆகிய இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.