வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

ஆவேஷ் கான் திறமைசாலி : ரோகித் சர்மா

இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் ஒரு திறமைசாலி எனவும், அவரது திறமை எங்களுக்குப் புரிகிறது எனவும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:00 am

DIN

இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் ஒரு திறமைசாலி எனவும், அவரது திறமை எங்களுக்குப் புரிகிறது எனவும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையேயான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. அதே போல டி20 தொடரையும் கைப்பற்றியது. 

ரிஷப் பண்ட், ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோரது சிறப்பான பேட்டிங் மற்றும் இந்திய பந்து வீச்சாளர்களின் அசத்தலான பந்து வீச்சும் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்தது. 

போட்டி முடிவடந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசியதாவது: “ இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். சீரான இடைவெளிகளில் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்றியது வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்தது. ஆவேஷ் கானின் திறமையை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஓரிரு போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை என்பதற்காக ஒருவர் சரியாக விளையாடவில்லை எனக் கூறிவிட முடியாது. அவர்களது திறமைகளை மனதில் வைத்திருக்க வேண்டும். வீரர்களுக்கு அவர்களது திறமையை வெளிப்படுத்த உரிய காலம் கொடுக்கப்பட வேண்டும். ஆவேஷ் அவரது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார்.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.