வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கார்ல்செனை மீண்டும்  வென்ற பிரக்ஞானந்தா

அமெரிக்காவில் நடைபெற்ற எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா கடைசி சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார். 

News image
Updated On :22 ஆகஸ்ட் 2022, 11:37 pm

அமெரிக்காவில் நடைபெற்ற எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா கடைசி சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார். 

போட்டியின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சென் முதலிடம் பிடிக்க, பிரக்ஞானந்தா 2 தோல்விகள் மட்டும் கண்டு 15 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தார். முதலிடத்தை இழந்தாலும், கார்ல்செனை 3-ஆவது முறையாக வீழ்த்தி அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தார். ஏற்கெனவே இரு முறை ஆன்லைன் போட்டிகளில் பிரக்ஞானந்தா அவரை வென்றிருந்தார். 

இந்நிலையில், இந்தப் போட்டியின் கடைசி சுற்றில் பிரக்ஞானந்தா - கார்ல்சென் விளையாடினர். அதில் முதல் இரு கேம்கள் டிரா ஆக, 3-ஆவது கேமை கார்ல்சென் கைப்பற்றினார். எனினும், 4-ஆவது கேமை பிரக்ஞானந்தா வென்று ஆட்டத்தை டை பிரேக்கருக்கு நகர்த்தினார். பிலிட்ஸ் முறையிலான அந்த இரு டை பிரேக்கரையும் வென்று கார்ல்செனுக்கு அதிர்ச்சி அளித்தார் பிரக்ஞானந்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.