முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: வரலாறு படைத்த சிராக் - சாத்விக் ஜோடி!

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்குத் தகுதி பெற்று...

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 2:10 pm IST

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்குத் தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளார்கள் இந்திய வீரர்களான சிராக் - சாத்விக் சைராஜ்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிராக் - சாத்விக் சைராஜ் ஜோடி, ஜப்பானின் யுகோ - டகுரோ ஜோடியைக் காலிறுதியில் எதிர்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய ஜோடி, 24-22, 15-21, 21-14 என ஜப்பான் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்கள். இதன்மூலம் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் பதக்கம் பெறும் முதல் இந்திய ஜோடி என்கிற சாதனையை சிராக் - சாத்விக் சைராஜ் ஆகியோர் படைத்துள்ளார்கள். இதற்கு முன்பு 2011-ல் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில்  மகளிர் இரட்டையர் பிரிவில் ஜுவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா ஆகிய இருவரும் பதக்கம் வென்றார்கள்.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் வரலாற்றில் இந்தியாவின் 13-வது பதக்கத்தை சிராக் - சாத்விக் சைராஜ் ஜோடி உறுதி செய்துள்ளது. 2011 முதல் இப்போட்டியில் இந்தியா குறைந்தபட்சம் ஒரு பதக்கமாவது பெற்று வருகிறது. அரையிறுதியில் சிராக் - சாத்விக் சைராஜ் ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா - வூய் சோஹ் ஜோடியை எதிர்கொள்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.