தேசிய கால்பந்து: மேற்கு வங்கம் சாம்பியன்
சென்னையில் நடைபெற்ற தபால் துறையின் 34-ஆவது தேசிய கால்பந்து போட்டியில் மேற்கு வங்க அணி வெள்ளிக்கிழமை சாம்பியன் ஆனது.


சென்னையில் நடைபெற்ற தபால் துறையின் 34-ஆவது தேசிய கால்பந்து போட்டியில் மேற்கு வங்க அணி வெள்ளிக்கிழமை சாம்பியன் ஆனது.
நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிஸா அணியை வீழ்த்தியது. கேரளம் 3-ஆம் இடமும், கா்நாடகம் 4-ஆம் இடமும் பிடித்தன. 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் கேரளம் 2-1 என கா்நாடகத்தைச் சாய்த்தது.
போட்டியின் நிறைவு நிகழ்ச்சியில் சென்னை வருமானவரித் துறை முதன்மை ஆணையா் செல்வகணேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கினாா். தமிழ்நாடு அஞ்சல் வட்டத் தலைவா் ராஜேந்திர குமாா், சா்வதேச கால்பந்து வீரா் முகமது அம்ஜத் ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...