அரையிறுதியில் மொராக்கோ போராட்டம் வீண்: பிரான்ஸ் அபார வெற்றி (2-0)

கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் அணி அபார வெற்றி பெற்றி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 
உலகக் கோப்பை அரையிறுதியின் போது பிரான்ஸின் தியோ ஹெர்னாண்டஸ் (நடுவில்) தொடக்க கோலை அடித்தார்
உலகக் கோப்பை அரையிறுதியின் போது பிரான்ஸின் தியோ ஹெர்னாண்டஸ் (நடுவில்) தொடக்க கோலை அடித்தார்

உலகக் கோப்பை 2வது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி, முதன்முறையாக அரையிறுதி வந்த மொராக்கோ அணியுடன் மோதியது. 

தடுப்பாட்டத்தில் பலம்வாய்ந்த மொராக்கா அணி அசந்த நேரத்தில் முதல் 5வது நிமிஷத்திலே பிரான்ஸ் அணியை சேர்ந்த  தியோ ஹெர்னாண்டஸ் முதல் கோலடித்து அசத்தினார். தடுத்திருக்கிய வேண்டிய கோல்தான். அதிர்ஷடம் பிரான்ஸிடம் இருந்தது. முதலில் ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி மெல்ல மெல்ல மொராக்கா அணியிடம் பந்துகளை விட ஆரம்பித்தது. கார்னர் வாய்ப்புகளில் 43வது நிமிஷத்தில் அருமையான வாய்ப்பை இழந்தது மொராக்கோ. பிரான்ஸ் கோல் கீப்பர் ஹ்யூகோ லொரிஸ் சிறப்பாகவே செயல்பட்டார். இருப்பினும் முதல் பாதி வரை மொராக்கா அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. 

இரண்டாம் பாதியில் இரண்டு அணிகளும் வலுவாக போராடியது. பாபேவின் உதவியினால் 79வது நிமிஷத்தில் மாற்று வீரராக வந்த கோலோ முஹனி பிரான்ஸுக்கு இரண்டாவது கோலை அடித்தார். உள்ளே வந்ததும் 44வது நொடியிலேயே கோலடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பாக 26 நொடிகளில் டென்மார்க் வீரர் அடித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது. 

மொராக்கோ கடைசி நிமிஷத்தில் கூட கோலடிக்க போராடியது. ஆனால் மொராக்கோவின் போராட்டம் வீணானது. இறுதியில் 2-0 என பிரான்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 

ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனாவுடன் பிரான்ஸ் மோதுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com