தோல்விக்குப் பிறகு எம்பாப்பேவின் முதல் ட்வீட்! 

பிரான்ஸ் அணியின் கால்பந்து வீரர் எம்பாப்பேவின் ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 
தங்கக் காலணி விருதை வென்ற எம்பாப்பே.
தங்கக் காலணி விருதை வென்ற எம்பாப்பே.

உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா வென்றதால் மெஸ்ஸி உலகின் சிறந்த கால்பந்து வீரராகப் போற்றப்படுகிறார். எனினும் தோல்வியடைந்தாலும் பிரான்ஸின் 23 வயது வீரர் எம்பாப்பே உலகக் கால்பந்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். எம்பாப்பேவின் மகத்தான ஆட்டம் தான் இறுதிச்சுற்றை மிகவும் சுவாரசியமாக்கியது என்பது மிகையாகாது. 

பொறி பறந்த 2-வது பாதியில் 80 மற்றும் 81-வது நிமிடங்களில் இரு கோல்களை அடித்து அசத்தினார் எம்பாப்பே. 90 நிமிடங்களுக்குப் பிறகு இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரத்தில் 108-வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடிக்க, 118-வது நிமிடத்தில் எம்பாப்பே இன்னொரு கோல் அடித்து 3-3 என சமநிலைக்குக் கொண்டு வந்தார். அதன்பிறகு இரு அணிகளாலும் மேலும் கோல் எதுவும் அடிக்க முடியாததால் ஆட்டம் பெனால்டி பகுதிக்குச் சென்றது. இதில் 4-2 என ஆர்ஜென்டீனா வென்று கால்பந்து உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. 

7 கோல்களை அடித்த மெஸ்ஸியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 8 கோல்களுடன் தங்கக் காலணி விருதை வென்றார் எம்பாப்பே. கோப்பையை இழந்தாலும் ரசிகர்களின் இதயத்தை வென்றார் எம்பாப்வே. தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், “நாங்கள் திரும்ப வருவோம்” என பதிவிட்டுள்ளார். 

இந்த ட்வீட் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. மேலும் இந்த ட்வீட்டுக்கு 1.3 மில்லியன் (13 லட்சம்) லைக்குகளை பெற்றுள்ளது. 171 ஆயிரத்தும் மேலான ரீடிவிட்டுகள் செய்யப்பட்டுவருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com