
ஆர்.ஜே.பாலாஜி பதிவிட்ட தாடி, மீசை இல்லாத புகைப்படத்திற்கு காரணம் ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இயக்குநர் கோகுலுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘சிங்கப்பூர் சலூன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படமும் கோகுலின் நகைச்சுவை பாணியிலான படமாக உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றதாக கூறியுள்ளார். மேலும் இந்தப் படம் 2023ஆம் ஆண்டு கோடையில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் பகிர்ந்த தாடி மீசையில்லாத புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு “ஏன் ப்ரோ ஷேவ் பண்ணீங்க”, “ஷாக் ஆய்டேன் ப்ரோ” என ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி சிகையலங்காரம் தொடர்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்காக ஒன்றரை மாதம் தேர்ந்த சிகையலங்கார கலைஞரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
And its a wrap for #SingaporeSaloon !
— RJ Balaji (@RJ_Balaji) December 18, 2022
In theatres, Summer 2023 ! pic.twitter.com/QC8aS6oYoI