மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

துணிவு படத்தின் 3வது பாடல் குறித்த அப்டேட்! 

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்தின் 3வது பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :19 டிசம்பர் 2022, 3:05 pm IST

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா..சில்லா’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலான ‘காசேதான் கடவுளடா’ பாடலும் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 

இந்நிலையில் 3வது பாடலான ‘கெத்து’ பாடலை குறித்து நடன இயக்குநர் கல்யாண் மாஸ்டர், “ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி கெத்து பாடலில் அஜித் சாரை புதிய ஸ்டைலில் காட்டியுள்ளோம். இந்தப் பாடலுக்கு தியேட்டரில் யாருடைய கால்களும் ஆடாமல் இருக்காது. இந்தப் பாடல்தான் தொடக்க பாடலாகவும்  இருக்கும். நானும் இந்தப் பாடலில் கௌரவ தோற்றத்தில் வந்துள்ளேன்” என நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். 

இதனால் அஜித் ரசிகர்கள் கெத்து பாடலுக்காக காத்திருக்கிறோம் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Related Article

மஞ்சு வாரியர் ஏமாற்றப்பட்டாரா? ரசிகர்கள் கிண்டல்!

காசேதான் கடவுளடா பாடல்: ரசிகர்களின் மீம்ஸ்களுக்கு விளக்கமளித்த நடிகை மஞ்சு வாரியர்

‘பெண்கள் துர்கையம்மனின் உருவங்கள்’- நடிகைகளுக்கு ஆதரவளித்த திவ்யா!

'நான் அந்த மாதிரி பெண் இல்லை' - சீறும் டாப்ஸி: காரணம் என்ன?

அஜித் முதுகுல குத்திட்டாங்க: ரசிகர்கள் கிண்டல் !

யார் நம்பர்.1 நடிகர்? அஜித் மேலாளரின் பதிலடி ட்வீட்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.