பொங்களுக்கு அஜித்தின் துணிவு படமும், விஜய்யின் வாரிசு படமும் வெளியாக உள்ளது. இதனால் யாருக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படுவது என சிக்கல் எழுந்துள்ளது.
வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ “அஜித்துடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் விஜய்தான் நம்பர்.1 இடத்தில் இருக்கிறார். ஆனால், வாரிசு படத்திற்கு குறைவான திரைகளே ஒதுக்கப்பட்டுள்ளன. நான் சென்னைக்கு சென்று உதயநிதியை சந்தித்து கூடுதல் திரைகள் குறித்துப் பேசப்போகிறேன்’ என நேர்காணல் ஒன்றில் பேசிய விடியோ வைரல் ஆனது. இதனால் அஜித் ரசிகர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். தொலைக்காட்சி விவாதங்களில் கூட இது பேசு பொருளானது.
அஜித் மேலாளர் சுரேஷ் சந்திராவின் பதிவு வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் குமார் துணிவு திரைப்படத்தின் இறுதிகட்டப் பணிகளுக்காக திரும்பிய நடிகர் அஜித்குமார் அதனை நிறைவு செய்து மீண்டும் பைக் பயணத்தில் ஈடுபட்டார். தற்போது அவர் உலக சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் தனது பைக் பயணத்தை நிறைவு செய்துள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அஜித் குமாரின் புகைப்படத்தினை பதிவிட்டு துணிவில்லையேல் புகழில்லை எனும் ஆங்கில வாசகம் “நோ கட்ஸ் நோ குளோரி” எனப் பதிவிட்டுள்ளார். இது தில் ராஜூ கூறியதற்கான எதிர்வினையாக ரசிகர்கள் கருதுகிறார்கள். அந்த புகைப்படத்திற்கு கீழ் அஜித், விஜய் ரசிகர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.
மீடியா முன்பு பேசுவதற்கே பயமாக இருக்கிறது: தயாரிப்பாளர் தில் ராஜூ
இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த அஜித்குமார்
கதாநாயகனானார் ‘ராட்சசன்’ வில்லன்
’வியக்க வைக்கும் பிரம்மாண்டம். ஆனால்..’ அவதார் -2 | திரைவிமர்சனம்
”உதயநிதியை சந்திக்கிறேன். தமிழகத்தில் விஜய்தான் நம்பர்.1..” ஆவேசமான தில் ராஜூ