உலகக் கோப்பை: ஜியோ சினிமா செயலி வழியாகப் பார்த்த ரசிகர்கள் எத்தனை பேர்?

உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டத்தை ஜியோ சினிமா செயலி வழியாக...
உலகக் கோப்பை: ஜியோ சினிமா செயலி வழியாகப் பார்த்த ரசிகர்கள் எத்தனை பேர்?

பரபரப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டத்தை ஜியோ சினிமா செயலி வழியாக 3.2 கோடி ரசிகர்கள் பார்த்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆனது. கூடுதல் நேரத்துக்குப் பிறகு இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன. 

1978, 1986-க்குப் பிறகு ஆர்ஜென்டீனா அணி வென்ற 3-வது உலகக் கோப்பை இது. மெஸ்ஸி முதல்முறையாக உலகக் கோப்பையை ஏந்திய தருணமும் இம்முறைதான் அமைந்தது. 1962-க்குப் பிறகு அடுத்தடுத்து உலகக் கோப்பைகளை வென்ற அணி என்கிற பெருமையைப் பெறுவதற்காக பிரான்ஸ் கடுமையாக முயன்றது. இறுதியில் பெனால்டியில் தோற்றுப் போனது. உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் ஹாட்ரிக் கோல்களை அடித்த 2-வது வீரர் என்கிற பெருமையை அடைந்தார் பிரான்ஸின் எம்பாப்பே. பரிசளிப்பு விழாவில் தங்கக் காலணி விருது எம்பாப்பேவுக்கு வழங்கப்பட்டது. போட்டியின் சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வானார்.

இந்தியாவில் ஜியோ சினிமா ஓடிடியிலும் ஸ்போர்ட்ஸ் 18 சேனலிலும் கால்பந்து உலகக் கோப்பை ஒளிபரப்பப்பட்டது. 

இந்நிலையில் இறுதிச்சுற்று ஆட்டத்தை ஜியோ சினிமா செயலி வழியாக 3.2 கோடி (32 மில்லியன்) ரசிகர்கள் பார்த்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தொலைக்காட்சியில் பார்த்தவர்களை விடவும் ஜியோ சினிமா செயலி வழியாகப் பார்த்தவர்கள் அதிகம். இந்திய அளவிலான டிஜிடல் வரலாற்றில் இதுபோல நடைபெற்றிருப்பது இதுவே முதல்முறை. ஜியோ சினிமா ஓடிடி மற்றும் ஸ்போர்ட்ஸ் 16 சேனல் வழியாக உலகக் கோப்பை ஆட்டங்கள் 40 பில்லியன் நிமிடங்களுக்குப் பார்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகக் கோப்பைப் போட்டி தொடங்கிய நாளன்று ஜியோ சினிமா செயலி வழியாக ஆட்டத்தைப் பார்ப்பதில் ரசிகர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. சமூகவலைத்தளங்களில் பல ரசிகர்கள், ஜியோ சினிமா ஓடிடியில் கால்பந்து ஆட்டத்தை சரிவர பார்க்க முடியவில்லை எனப் புகார் தெரிவித்தார்கள். ஆட்டத்தின் ஒளிபரப்பு அவ்வபோது அப்படியே நின்றுவிடுகிறது, பலமுறை ஒளிபரப்பில் தடங்கல் ஏற்படுகிறது எனத் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தினார்கள். எனினும் இந்தக் குறைகள் விரைவாகச் சரிசெய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com