கோவையில் தொடங்கிய ரஞ்சி கோப்பை ஆட்டம்!

32 வருடங்கள் கழித்து கோயம்புத்தூரில் ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்திரஜித் பாபா (கோப்புப் படம்)
இந்திரஜித் பாபா (கோப்புப் படம்)

32 வருடங்கள் கழித்து கோயம்புத்தூரில் ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது.

2022-23 ரஞ்சி கோப்பை போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தை டிரா செய்த தமிழக அணி, 3 புள்ளிகளைப் பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆந்திராவை எதிர்கொள்கிறது.

தமிழ்நாடு - ஆந்திரா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம் கோயம்புத்தூர் எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆந்திர அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது. தமிழக அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார்.

32 வருடங்கள் கழித்து கோயம்புத்தூரில் ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெறுகிறது. கடந்த வருடம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரு டெஸ்டுகள் நடைபெற்றபோது ஆடுகள வடிவமைப்பாளராக இருந்த ரமேஷ் குமார், இந்த மைதானத்தின் ஆடுகள வடிவமைப்பாளராகச் செயல்படுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com