ரஞ்சி கோப்பை: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுவதில் பலத்த போட்டி!

2-வது நாள் முடிவில் தமிழக அணி, 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்துள்ளது.
பாபா இந்திரஜித் (கோப்புப் படம்)
பாபா இந்திரஜித் (கோப்புப் படம்)


தில்லி அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் 2-வது நாள் முடிவில் தமிழக அணி, 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்துள்ளது.

தமிழக அணி 3 புள்ளிகளும் தில்லி அணி 1 புள்ளியும் பெற்றுள்ள நிலையில் இரு அணிகளும் ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் மோதுகின்றன. தில்லி அணியிலிருந்து நிதிஷ் ராணா நீக்கப்பட்டுள்ளார். இஷாந்த் சர்மா, சைனி, சிமர்ஜீத் சிங் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. டாஸ் வென்ற தமிழக அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. தில்லி அணியின் துருவ் ஷோரே 66, ஜான்டி சித்து 57 ரன்கள் எடுத்தார்கள்.

முதல் நாள் முடிவில் தில்லி அணி, 76 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.

2-வது நாளன்று தில்லி அணி முதல் இன்னிங்ஸில் 97.1 ஓவர்களில் 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிரன்ஷு 58 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 300 ரன்களைத் தாண்ட உதவியாக இருந்தார். தமிழக அணியின் எல். விக்னேஷ், சந்தீப் வாரியர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

தமிழக அணி நம்பிக்கையுடன் முதல் இன்னின்ங்ஸில் விளையாடி வந்தாலும் முக்கிய பேட்டர்களால் பெரிய ஸ்கோரை எடுக்க முடியாமல் போனது. சாய் சுதர்சன் 25, ஜெகதீசன் 34, பாபா அபரஜித் 57, கேப்டன் பாபா இந்திரஜித் 71 ரன்கள் எடுத்தார். 

2-வது நாள் முடிவில் தமிழக அணி, 54 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் சங்கர் 17, பிரதோஷ் ரஞ்சன் பால் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 89 ரன்கள் பின்தங்கியிருப்பதால் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி முன்னிலை பெறும் நிலையில் உள்ளது. எனினும் மீதமுள்ள 5 விக்கெட்டுகளை எடுக்க தில்லி அணி முனைப்புடன் விளையாடும் என்பதால் 3-வது நாள் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com