புதிய அணியில் ரொனால்டோ: அதிக தொகைக்கு ஒப்பந்தம்!
37 வயதான உலகப் புகழ்பெற்ற வீரர் ரொனால்டோ உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டது இந்தமுறையும் நடக்கவில்லை. தோஹாவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மொராக்கோவிடம் 0-1 எனத் தோற்று வெளியேறியிருக்கிறது போர்ச்சுகல். ரொனால்டோவின் கடைசி உலகக் கோப்பை இதுவே என அறியப்படுகிறது. போர்ச்சுகல் அணிக்காக 195 ஆட்டங்களில் விளையாடி 118 கோல்கள் அடித்துள்ளார் ரொனால்டோ.
ஆண்டுக்கு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 16ஆயிரம் கோடி ரூபாய்)க்கு ரொனால்டோ வை சௌதியின் கிளப் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 2025 வரை இந்த அணிக்காக விளையாட உள்ளார் ரொனால்டோ. சில தகவல்கள் 75 மில்லியன் அமெரிக்க டாலர் என்றும் விளம்பரம் மற்றும் இதன் மூலமாக இதர வருவாய்களும் சேர்த்து இவ்வாறு பெரிய தொகையாக மாறியிருக்கலாம் எனத் தெரிவிக்கின்றன.
இது குறித்து சௌதியின் அல் நசீர் கால்பந்து அணி, “வரலாறு படைக்கப்பட்டது. ரொனால்டோவை அணியில் சேர்த்த்தன் மூலம் எங்களது அணியை மட்டும் ஊக்கப்படுத்தாமல் இந்த தொடரினையும் எங்களது நாட்டின் வருங்கால ஆண்கள், பெண்கள் அவர்களது சிறந்த நிலையை அடைய உதவும் என நம்புகிறோம். ரொனால்டோ அவர்களின் புதிய வீட்டிற்கு அல்நசீர் கால்பந்து அணி வரவேற்கிறது” என ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.
இதையும் படிக்க: தோல்விக்குப் பிறகு எம்பாப்பேவின் முதல் ட்வீட்!
மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து சமீபத்தில் ரொனால்டோ நீக்கப்பட்டார். கால்பந்து உலகக்கோப்பை போட்டியிலும் அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. இந்நிலையில் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“ஐரோப்பாவில் பல வெற்றிகளை பெற்றிருந்தாலும் ஆசியாவில் எனது பங்களிப்பை தொடருவதில் மகிழ்ச்சியளிக்கிறதென” கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். அவரது வாழ்க்கையில் முதன்முறையாக ஐரோப்பியாவின் பெரிய போட்டிகளை விட்டு விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.