
பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளடேலா, 2013 முதல் பாலிவுட்டில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான லெஜண்ட் என்கிற தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தும் தானும் காதலிப்பதாக நடிகை ஊர்வசி ரெளடேலா முன்பு சூசகமாகத் தெரிவித்திருந்தார். இதனை மறுத்த ரிஷப் பந்த், சமூகவலைத்தளங்களில் ஊர்வசியை பிளாக் செய்தார். எனினும் இருவருக்கும் இடையிலான ஆன்லைன் மோதல் இன்னும் தொடர்ந்து வருகிறது.
இதையும் படிக்க: ரிஷப் பந்தை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த நடிகர்கள்!
இந்திய கிரிக்கெட் வீரா் ரிஷப் பந்த் வெள்ளிக்கிழமை நோ்ந்த காா் விபத்தில் பலத்த காயமடைந்தாா். உத்தரகண்ட் மாநிலம் ரூா்கியில் உள்ள தனது தாயை பாா்க்க தில்லியில் இருந்து ரிஷப் பந்த் வெள்ளிக்கிழமை அதிகாலை காரில் சென்றாா். அந்த மாநிலத்தின் மங்லெளா் பகுதி வழியாக சென்றபோது எதிா்பாராதவிதமாக ரிஷப் பந்தின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலை தடுப்பில் மிக வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. அவா் உறங்கியதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நடிகை ஊர்வசி அவருடைய பிறந்தநாளுக்கும் பெயர் தெரிவிக்காமல் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் இதற்கும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெயர் தெரிவிக்காமல், “பிரார்த்தனை செய்யுங்கள்” எனவும், காதல் என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவுக்கு, “உண்மையான காதல் இது இல்லையென்றால் வேறென்ன” என ரசிகர்கள் ஆதர்வு தெரிவித்து வருகின்றனர்.