தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்குப் புதிய பயிற்சியாளர்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இங்கிலாந்து அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக பால் காலிங்க்வுட் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :7 பிப்ரவரி 2022, 1:36 pm

DIN


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இங்கிலாந்து அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக பால் காலிங்க்வுட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி படுதோல்வியடைந்ததையடுத்து, தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கிறிஸ் சில்வர்வுட் கடந்த வாரம் நீக்கப்பட்டார். இந்த நிலையில், அணியின் துணைப் பயிற்சியாளர் பால் காலிங்க்வுட் மேற்கிந்தியத் தீவுகளுக்கான டெஸ்ட் தொடருக்கு அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட காலிங்க்வுட், தற்போது பார்படாஸில் ஓய்வில் உள்ளார். பிப்ரவரி 25-ம் தேதி வீரர்கள் ஆண்டிகுவா வரும்போது அவர்களுடன் காலிங்க்வுட் இணையவுள்ளார்.

டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி இந்த வாரத்தில் அறிவிக்கப்படவுள்ளது. முதல் டெஸ்ட் ஆட்டம் ஆண்டிகுவாவில் மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது.

பால் காலிங்க்வுட் இங்கிலாந்து அணிக்காக 68 டெஸ்ட், 197 ஒருநாள் மற்றும் 36 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.