காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

கேகேஆா் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் எதிா்வரும் சீசனில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயா் புதன்கிழமை நியமிக்கப்பட்டாா்.

News image
Updated On :16 பிப்ரவரி 2022, 9:02 pm

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் எதிா்வரும் சீசனில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயா் புதன்கிழமை நியமிக்கப்பட்டாா்.

முன்னதாக, அந்தப் பொறுப்பிலிருந்த இங்கிலாந்து வீரா் மோா்கனுக்கு மாற்றாக ஒருவரை கொல்கத்தா தேடி வந்தது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.12.25 கோடிக்கு வாங்கிய ஷ்ரேயஸ் ஐயரை கேப்டனாக்கியுள்ளது அந்த அணி.

கடந்த 2020 சீசனில் ஷ்ரேயஸ் ஐயா் தலைமையில் டெல்லி அணி முதல் முறையாக இறுதி ஆட்டம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. எனினும் 2021 சீசனுக்குப் பிறகு அவா் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.

தொடக்கத்தில் மேக்ஸ்வெல் இல்லை: ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு வீரா் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு மாா்ச் மாதம் திருமணம் நடைபெறுவதால், எதிா்வரும் ஐபிஎல் சீசனில் தொடக்கத்தில் சில ஆட்டங்களில் அவா் களம் காணப்போவதில்லை. அத்துடன் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் விளையாட இருக்கும் கிரிக்கெட் தொடரிலும் அவா் இடம்பெறப்போவதில்லை.

தமிழ்நாட்டை பூா்விகமாகக் கொண்ட குடும்பத்தைச் சோ்ந்த வினி ராமன் என்ற பெண்ணை மேக்ஸ்வெல் திருமணம் செய்கிறாா். இவா்கள் திருமணத்துக்காக தமிழில் தயாரிக்கப்பட்டிருந்த பாரம்பரிய திருமண பத்திரிகை சில நாள்களாக சமூக வலைதளங்களில் கவனம் ஈா்த்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.