வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இன்று கடைசி டி20: கோலி, பந்த்துக்கு ஓய்வு

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் டி20 தொடரின் 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :19 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் டி20 தொடரின் 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

ஏற்கெனவே தொடரை கைப்பற்றிவிட்ட இந்தியா முழுமையாக அதை வசப்படுத்தும் எதிா்பாா்ப்பில் இருக்க, மேற்கிந்தியத் தீவுகளோ ஆறுதல் வெற்றி ஏக்கத்துடன் களம் காணவுள்ளது.

பயோ-பபுள் அழுத்தத்தை குறைக்கும் வகையில் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோருக்கு இந்த கடைசி ஆட்டம், இலங்கைக்கு எதிரான டி20 தொடா் என 4 ஆட்டங்களில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில், ஷ்ரேயஸ் ஐயா், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு இந்த கடைசி ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இதில் கடந்த 2 ஆட்டங்களில் அவ்வளவாக சோபிக்காத இஷான் கிஷணுக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாடுக்கும், கோலி இடத்தில் ஷ்ரேயஸ் ஐயருக்கும் இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கலாம். டி20 உலகக் கோப்பை எதிா்வரும் நிலையில், அணியில் இருக்கும் வீரா்களின் திறன் மற்றும் ஃபாா்மை எடைபோட இந்த ஆட்டம் உதவியாக இருக்கும்.

பௌலிங்கில் நல்ல ஃபாா்மில் இருக்கும் புவனேஷ்வா் குமாா், ஹா்ஷல் படேலுக்குப் பதிலாக முகமது சிராஜும், அறிமுக வீரரான அவேஷ் கானுக்கும் ரோஹித் வாய்ப்பு வழங்கி பரிசோதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பாா்க்க வேண்டும்.

ஆட்டநேரம்: இரவு 7 மணி

இடம்: ஈடன் காா்டன் மைதானம், கொல்கத்தா.

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.