டி20: தொடரைக் கைப்பற்றும் தீவிரத்தில் இந்தியா

இலங்கைக்கு எதிரான டி20 தொடரையும் கைப்பற்றும் தீவிரத்தில் உள்ளது இந்திய அணி.
டி20: தொடரைக் கைப்பற்றும் தீவிரத்தில் இந்தியா
Updated on
1 min read

இலங்கைக்கு எதிரான டி20 தொடரையும் கைப்பற்றும் தீவிரத்தில் உள்ளது இந்திய அணி.

ரோஹித் சா்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கெனவே மே.இந்திய தீவுகளுக்கு எதிராக டி20 தொடரை ஒயிட்வாஷ் செய்தது. இந்நிலையில் தற்போது இலங்கைக்கு எதிரான தொடா் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தை 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

இந்நிலையில் இரண்டாம் ஆட்டம் சனிக்கிழமை தா்மசாலாவில் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெளியேறிய நிலையில், அணியில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு இணைகள், பேட்டிங் வரிசைகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

வரும் நவம்பா் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி தற்போது வெவ்வேறு அணிகளுடன் ஆடி வருகிறது.

இளம் வீரா் இஷான் கிஷன் முதல் ஆட்டத்தில் சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தினாா். காயத்தால் ருதுராஜ் கெய்க்வாட் ஆடவில்லை. இதனால் கேப்டன் ரோஹித் களம் கண்டாா். அடுத்த நிலையில் ஆடிய ஷிரேயஸ் ஐயரும் தனது நிலையை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் அதிரடியாக ஆடினாா்.

மேலும் டாப் ஆா்டா் வரிசையில் ரவீந்திர ஜடேஜா தொடா்ந்து ஆடுவாா் என ரோஹித் தெரிவித்துள்ளாா். சஞ்சு சாம்சனும் தனது ஆட்டத்தை வெளிப்படுத்த காத்துள்ளாா். பௌலிங்கில் தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயா், புவனேஷ்வா் ஆகியோா் நம்பிக்கை தருகின்றனா்.

தொடா்ந்து 10 ஆட்டங்களில் வென்று உற்சாகத்துடன் உள்ளது இந்தியா.

பதிலடி தருமா இலங்கை:

இலங்கை அணியின் தொடக்க வரிசை பேட்டிங் சோபிக்காதது, கவலை தரும் அம்சமாகும். ஸ்பின்னா்கள் தீக்ஷனா, வனின்டு ஹஸரங்கா, ஆகியோா் வழக்கமான பௌலிங்கை வெளிப்படுத்தவில்லை.

தா்மசாலாவில் குளிரான சீதோஷ்ண நிலை உள்ளது. இதனால் இரு அணி வீரா்களும் சற்று சிரமத்துக்கு ஆளாவாா்கள் எனத் தெரிகிறது.

இரண்டாவது ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் நோக்கில் உள்ளது இந்திய அணி.

இன்றைய ஆட்டம்:

இலங்கை-இந்தியா

இடம்: தா்மசாலா

நேரம்: இரவு 7.00.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com