வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

2ஆவது டி20 கிரிக்கெட்: இந்திய அணிக்கு 184 ரன்கள் இலக்கு

இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணிக்கு 184 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2022, 3:44 pm

DIN

இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணிக்கு 184 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது டி20 ஆட்டம் இமாச்சலப் பிரதேசம் தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசாங்கா, குணதிலகா ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் சிறப்பான துவக்கம் அளித்ததோடு அதிரடியாகவும் விளையாடினர். இதனால் அந்த அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஆனால் குணதிலகா 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

இந்த நிலையில களமிறங்கிய ஷனாகா, நிசாங்காவுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்றொரு புறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க ஆட்டக்காரர் நிசாங்கா அரைசதம் கடந்து அசத்தினார். இருப்பினும் அவர் 75 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. ஷனாகா 47 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.