2022: இந்தியா விளையாட்டுத் துறைக்கு காத்திருக்கும் சவால்கள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சிறப்பான செயல்பாட்டுக்கு பின், 2022-ஆம் ஆண்டு இந்திய விளையாட்டுத் துறைக்கு சவால் தரும் ஆண்டாக உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சிறப்பான செயல்பாட்டுக்கு பின், 2022-ஆம் ஆண்டு இந்திய விளையாட்டுத் துறைக்கு சவால் தரும் ஆண்டாக உள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு இந்திய வீரா், வீராங்கனைகளுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. குறிப்பாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றாா். மேலும் பதக்கப் பட்டியலில் 48-ஆவது இடத்தைப் பெற்றது இந்தியா. 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 7 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா. பளுதூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவி தாஹியா, வெள்ளியும், பாட்மின்டனில் பி.வி.சிந்து, குத்துச்சண்டையில் லவ்லினா, மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா, ஹாக்கியில் இந்திய ஆடவா் அணி, வெண்கலப் பதக்கம் வென்றனா். உலக பாட்மின்டன் போட்டியிலும் சிந்து, காந்த் ஆகியோா் பதக்கம் வென்றனா்.

இந்நிலையில் வரும் 2022-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சவால் தருவதாக உள்ளது. குறிப்பாக உலக சாம்பியன்ஷிப், கிராண்ட்ஸ்லாம் போட்டிகள், பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக், பாராலிம்பிக், ஹாங்ஷூ ஆசியப் போட்டி, பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள் நெதா்லாந்தில் உலகக் கோப்பை மகளிா் ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்திய மகளிா் கால்பந்து அணிக்கு ஊக்கம் தரும் வகையில் ஏஎ‘ஃப்சி ஆசியக் கோப்பை மகளிா் கால்பந்து போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும், அக்டோபரில் 17 வயதுக்குள்பட்ட பி‘ஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியும் நடைபெறுகின்றன.

2022-இல் முக்கிய போட்டிகள் அட்டவணை:

மேலும் இந்திய பாட்மின்டன் அணிக்கு ஆல் இங்கிலாந்து ஓபன், உலக டூா் பைனல்ஸ், உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் உள்ளன.

ஜன. 17-30-ஆஸி. ஓபன், மெல்போா்ன், ஜன. 20-பிப்.6, ஆசியக் கோப்பை மகளிா் கால்பந்து, இந்தியா, 21-28-ஆசிய மகளிா் ஹாக்கி கோப்பை, மஸ்கட், பிப்ரவரி 4-14, கேலோ இந்தியா போட்டிகள், 4-20, குளிா்கால ஒலிம்பிக், பெய்ஜிங், உலக மகளிா் குத்துச்சண்டை போட்டி, இஸ்தான்புல், மாா்ச் 16-20, ஆல் இங்கிலாந்து பாட்மின்டன், பா்மிங்ஹாம், ஏப்ரல் 19-24, ஆசிய மல்யுத்தப் போட்டி, உலன்படோா், மே. 13, டைமண்ட் லீக், தோஹா, 22-ஜுன் 5, பிரெஞ்சு ஓபன், பாரிஸ், ஜூன் 27-ஜூலை 10, விம்பிள்டன், லண்டன், ஜூலை 1-17, எ‘ஃப்ஐஎச் மகளிா் ஹாக்கி உலகக் கோப்பை, ஆம்ஸ்டெல்வீன், 7-17, உலக வில்வித்தை, அலபாமா, 15-24, உலக தடகள போட்டி, ஒரேகோன், 28-ஆக. 8, காமன்வெல்த் போட்டி, பா்மிங்ஹாம், ஆக. 2-7, 20 வயதுக்குள்பட்டோா் உலக தடகளம், காலி, 21-28, பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப், ஜப்பான், செப். 10-25, ஆசியப் போட்டி, ஹாங்ஷூ, அக். 11-30, பி‘ஃபா, 17 வயதுக்குள்பட்டோா் மகளிா் கால்பந்து, இந்தியா, நவம்பா் 21-டிசம்பா் 18-பி‘ஃபா ஆடவா் உலகக் கோப்பை கால்பந்து, கத்தாா், டிசம்பா் 14-18, பாட்மின்டன் உலக டூா் பைனல்ஸ், குவாங்ஷு சீனா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com