300 டெஸ்ட் விக்கெட்டுகள்: நியூசி. பந்துவீச்சாளர் போல்ட் சாதனை

வங்கதேசத்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை எடுத்த டிரெண்ட் போல்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளைக் கடந்துள்ளார்.
300 டெஸ்ட் விக்கெட்டுகள்: நியூசி. பந்துவீச்சாளர் போல்ட் சாதனை

வங்கதேசத்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை எடுத்த டிரெண்ட் போல்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளைக் கடந்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ ஆன் ஆகியுள்ளது. நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் இரட்டைச் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது வங்கதேச அணி. முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தது வங்கதேச அணி.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் ஞாயிறன்று தொடங்கியது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்திருந்தது. டாம் லேதம் 186, கான்வே 99 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்றைய ஆட்டத்தில் டாம் லேதம் இரட்டைச் சதமும் கான்வே சதமும் அடித்து அசத்தினார்கள். கான்வே 109 ரன்களிலும் டாம் லேதம் 252 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். நியூசிலாந்து அணி 128.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 521 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதன்பிறகு முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி, 41.2 ஓவர்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது. யாசிர் அலி அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். டிரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளையும் டிம் செளதி 3 விக்கெட்டுகளையும் ஜேமிசன் 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 395 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நியூசி. கேப்டன் டாம் லேதம் வங்கதேச அணியை மீண்டும் பேட்டிங் செய்யச் சொல்வாரா அல்லது தனது அணியின் 2-வது இன்னிங்ஸைத் தொடர்வாரா என்பது நாளை தெரிய வரும். 

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட். வங்கதேச பேட்டரான மெஹிதி ஹசன் மிராஸின் விக்கெட்டை எடுத்தபோது இந்தப் பெருமையை அவர் அடைந்தார். இந்த இலக்கை எட்டிய மூன்றாவது நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர். இதற்கு முன்பு ஹேட்லி, வெட்டோரி, செளதி ஆகியோர் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com