ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கரோனாவிலிருந்து மீண்டார் ரோகித் சர்மா

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கரோனாவிலிருந்து மீண்டுள்ளதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

News image
Updated On :3 ஜூலை 2022, 2:02 pm

DIN

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கரோனாவிலிருந்து மீண்டுள்ளதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் போட்டி அட்டவணை திருத்தியமைக்கப்பட்டு எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த 5வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இரு அணிகளும் 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் ஒன்றில் விளையாடியது. இந்த பயிற்சி ஆட்டத்தின் 2வது நாளில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, அவர் 5வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத சூழல் உருவானது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு புதிய கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். 

இது குறித்து மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாவது: “ ரோகித் சர்மா கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்டபோது கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதன்மூலம், அவருடைய தனிமைப்படுத்துதல் காலம் முடிவுக்கு வருகிறது. இருப்பினும், அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் டி20 பயிற்சி ஆட்டத்தில் விளையாடமாட்டார்.” என தெரிவித்துள்ளார். 

விதிமுறைகளின் படி, கரோனாவில் இருந்து ஒருவர் குணமடந்த பிறகு அவர் கண்டிப்பாக இதயத்துடிப்பு சோதனை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் கரோனாவிற்கு பிறகு அவரது நுரையீரல் எப்படி செயல்படுகிறது என்பது பரிசோதிக்கப்படும். 

கரோனாவிலிருந்து ரோகித் சர்மா குணமடைந்து அணிக்குத் திரும்பியுள்ளது இந்திய அணிக்கு வலு சேர்க்கும் விதமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.