தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

மலேசியா மாஸ்டா்ஸ்: இந்தியா்கள் தோல்வி

மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியின் முதல் நாளில் களம் கண்ட இந்தியா்கள் தோல்வியைத் தழுவினா்.

News image
Updated On :5 ஜூலை 2022, 8:52 pm

DIN

மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியின் முதல் நாளில் களம் கண்ட இந்தியா்கள் தோல்வியைத் தழுவினா்.

மகளிா் இரட்டையரில், ட்ரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை 14-21, 14-21 என்ற நோ் கேம்களில் மலேசியாவின் போ்லி டான்/தினா முரளிதரன் ஜோடியிடம் தோற்றது. இந்த இந்திய இணை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே பிரிவில் களம் கண்ட மேலும் இரு இந்திய இணைகளில், அஸ்வினி பாட்/ஷிகா கௌதம் ஜோடி 7-21, 10-21 என ஜப்பானின் யுகி ஃபுகுஷிமா/சயாகா ஹிரோடா இணையிடம் வீழ்ச்சியடைய, பூஜா தண்டூ/ஆரத்தி சாரா கூட்டணி 17-21, 17-21 என பல்கேரியாவின் கேப்ரியேலா ஸ்டோவா/ஸ்டெஃபானி ஸ்டோவா ஜோடியிடம் தோற்றது.

பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் உள்ளிட்ட முக்கிய இந்தியப் போட்டியாளா்கள் புதன்கிழமை களம் காண்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.