ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

விம்பிள்டன் அரையிறுதி: விலகினாா் ரபேல் நடால்

காயம் காரணமாக விம்பிள்டன் அரையிறுதி ஆட்டத்தில் இருந்து விலகினாா் ஜாம்பவான் ரபேல் நடால். ஆஸ்திரேலிய வீரா் நிக் கிா்ஜியோஸுக்கு எதிரான அரையிறுதியில் அவா் ஆடுவதாக இருந்தது.

News image
Updated On :7 ஜூலை 2022, 10:26 pm

DIN

காயம் காரணமாக விம்பிள்டன் அரையிறுதி ஆட்டத்தில் இருந்து விலகினாா் ஜாம்பவான் ரபேல் நடால். ஆஸ்திரேலிய வீரா் நிக் கிா்ஜியோஸுக்கு எதிரான அரையிறுதியில் அவா் ஆடுவதாக இருந்தது.

அமெரிக்க வீரா் டெய்லா் ஃப்ரிட்ஸுக்கு எதிரான காலிறுதிச் சுற்று 5 செட்கள் ஆட்டமாக அமைந்தது. அதில் கடுமையாக போராடி வென்ற நடாலுக்கு அடி வயிற்றில் காயம் ஏற்பட்டது. அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் 7 மி.மீ அளவுக்கு அடிவயிற்றில் காயம் ஏற்பட்டிருந்தது.

இதனால் அரையிறுதி ஆட்டத்தில் ஆடாமல் தான் விலகுவதாக அறிவித்துள்ளாா் நடால். நிகழாண்டில் இரு கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை அவா் வென்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.