சபாஷ் மித்து: விளம்பர நிகழ்ச்சியில் மிதாலி ராஜ் (படங்கள்)

விளம்பர  நிகழ்ச்சியில் நடிகை டாப்சியுடன் கலந்துகொண்டார் பிரபல கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ். 
சபாஷ் மித்து: விளம்பர  நிகழ்ச்சியில் மிதாலி ராஜ் (படங்கள்)

சபாஷ் மித்து படத்துக்கான விளம்பர  நிகழ்ச்சியில் நடிகை டாப்சியுடன் கலந்துகொண்டார் பிரபல கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ். 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரபல வீராங்கனை மிதாலி ராஜ் சமீபத்தில் அறிவித்தார். இந்திய மகளிர் அணிக்காக 12 டெஸ்டுகள், 232 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக இந்திய அணி பங்கேற்ற 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் விளையாடினார். 

தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்த மிதாலி ராஜ், ஆரம்ப காலங்களில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் பிறகு ஹைதராபாத்துக்கு இடம்மாறியது.  1999, ஜூன் 26 அன்று, 16 வயதில் அயர்லாந்து அணிக்கு எதிராகச் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் மிதாலி ராஜ். 

மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக சபாஷ் மித்து உருவாகியுள்ளது. தயாரிப்பு - வியாகாம்19 ஸ்டூடியோஸ். மிதாலி ராஜ் வேடத்தில் டாப்சி நடித்துள்ள படத்தை ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியுள்ளார். ஜூலை 15 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சபாஷ் மித்து படத்துக்கான விளம்பர  நிகழ்ச்சியில் டாப்சியுடன் கலந்துகொண்டார் மிதாலி ராஜ். அந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள்:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com