ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

2ஆவது டி20: இந்திய அணி வலுவான தொடக்கம்

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

News image
இந்திய அணி
Updated On :10 ஜூலை 2022, 1:31 pm

DIN

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20  போட்டி இன்று (ஜூலை 9) எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது, இதன்மூலம் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. அதே வேளையில் இங்கிலாந்து அணி தொடரை இழக்காமல் இருக்க இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

இன்றையப் போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல் போட்டியில் இடம் பெற்ற தீபக் ஹூடா மற்றும் அக்சர் படேல் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா அணிக்குத் திரும்பியுள்ளனர்.

சற்றுமுன் வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 4.3 ஓவர்களின் முடிவில் 49 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.