3ஆவது டி20: இங்கிலாந்து பேட்டிங், இந்திய அணியில் 4 மாற்றங்கள்

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
3ஆவது டி20: இங்கிலாந்து பேட்டிங், இந்திய அணியில் 4 மாற்றங்கள்

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இங்கிலாந்தில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணிற்கனவே 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், இன்று நடைபெறும் கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பிலும் களமிறங்குகின்றன.

இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புவனேஷ் குமார் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவர்களுக்குப் பதிலாக ஆவேஷ் கான் மற்றும் உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் சஹாலுக்குப் பதிலாக ரவி பிஷ்னாய் சேர்க்கப்பட்டுள்ளார். பேட்ஸ்மேன்களில் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் அணியில் இடம் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரீஸ் டாப்ளே மற்றும் பில் சால்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பர்கின்சன் மற்றும் சாம் கரண் இந்தப் போட்டியில் விளையாடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com