தீபக் ஹூடா - கிருணால் பாண்டியா மோதலின் தற்போதைய நிலவரம்

தீபக் ஹூடா - கிருணால் பாண்டியா இடையிலான மோதல் குறித்து பரோடா கிரிக்கெட் சங்கத்தின் தலைமை அதிகாரி பேட்டியளித்தார்.
தீபக் ஹூடா - கிருணால் பாண்டியா மோதலின் தற்போதைய நிலவரம்

தீபக் ஹூடா - கிருணால் பாண்டியா இடையிலான மோதல் குறித்து பரோடா கிரிக்கெட் சங்கத்தின் தலைமை அதிகாரி பேட்டியளித்தார்.

கடந்த வருடம் சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை போட்டியில் பரோடா அணியின் கேப்டன் கிருணால் பாண்டியாவுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தீபக் ஹூடா அணியில் இருந்தும் கரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் வெளியேறினார். இதனால் அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். கிருணால் பாண்டியா தன்னை அவமரியாதை செய்ததாக தீபக் ஹூடா குற்றம் சாட்டினார். 

பிறகு பரோடா அணியிலிருந்து தீபக் ஹூடா விலகினார். ராஜஸ்தான் அணியில் அவர் விளையாடுவதற்கு பரோடா கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்தது. பரோடா அணிக்காக 46 முதல்தர ஆட்டங்களில் தீபக் ஹூடா விளையாடியுள்ளார். 

கடந்த பிப்ரவரி முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் ஹூடா. சமீபத்தில் டி20 ஆட்டத்தில் சதமும் அடித்தார். 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் தீபக் ஹூடாவும் கிருணால் பாண்டியாவும் லக்னெள அணிக்காக ஒன்றாக விளையாடினார்கள். ஒரு பேட்டியில், கிருணால் எனக்குச் சகோதரர் போல. சகோதரர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்வார்கள். இருவரும் லக்னெள அணிக்காக வெற்றிகளைத் தேடித் தரவேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன் விளையாடுகிறோம் என்றார் ஹூடா.

இந்நிலையில் பரோடா அணியில் தீபக் ஹூடாவை மீண்டும் விளையாட வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பரோடா கிரிக்கெட் சங்கத்தின் தலைமை அதிகாரி ஷிஷிர், கிரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

எனக்குத் தெரிந்து ஹூடாவும் கிருணால் பாண்டியாவும் நன்குப் பழகி வருகிறார்கள். அவர்களுக்கிடையே இருந்த கருத்துவேறுபாடுகளைச் சரி செய்து விட்டார்கள். ஐபிஎல் போட்டியில் ஒரே அணியில் இணைந்து விளையாடினார்கள். ஹூடா, பரோடா அணிக்கு மீண்டும் திரும்புவார் என நம்புகிறோம். உறுதியாகச் சொல்ல முடியாது. வேறு அணி தேவைப்பட்டபோது ராஜஸ்தான் தான் ஹூடாவுக்கான கதவுகளைத் திறந்துவிட்டது. எங்கள் பக்கமிருந்து முயற்சிகள் எடுக்கிறோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com