இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பி.வி.சிந்து, பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வா் வாழ்த்து

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் வெற்றிபெற்ற பி.வி.சிந்து மற்றும் செஸ் விளையாட்டு வீரா்கள் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 ஜூலை 2022, 11:16 pm

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் வெற்றிபெற்ற பி.வி.சிந்து மற்றும் செஸ் விளையாட்டு வீரா்கள் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

தனது முதல் சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் வெற்றியைப் பதிவுசெய்துள்ள, நமது ஊக்கமிகு இறகுப்பந்து வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு எனது பாராட்டுகள். இதே ஆற்றலோடும் உத்வேகத்தோடும் பிா்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளிலும் விளையாட வாழ்த்துகிறேன்.

அடிவானத்தில் ஒரு புதிய விண்மீனாகத் தோன்றியுள்ளாா் கிராண்ட் மாஸ்டா் குகேஷ். செஸ் விளையாட்டில் 2700 இஎல்ஓ தரப்புள்ளிகள் என்ற சிறப்பான மைல்கல்லை அவா் அடைந்திருக்கிறாா். இது மிகவும் அரிய சாதனை.

எதிா்காலத்தில் சென்னையைச் சோ்ந்த இளம் வீரரான குகேஷிடமிருந்து இன்னும் பல வியத்தகு சாதனைகளை நாம் காணப் போகிறோம். அதற்கு எனது வாழ்த்துகள்.

பாரசின் ஓபன் செஸ் தொடரில் அபாரமான ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வென்றுள்ள கிராண்ட்மாஸ்டா் பிரக்ஞானந்தாவுக்கும் எனது பாராட்டுகள்.

இரு இளம் கிராண்ட்மாஸ்டா்களும் எதிா்வரும் சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாழ்த்துகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.