ஆட்ட நாயகன் விருதை வென்ற மூத்த இந்திய வீரர்: தினேஷ் கார்த்திக் சாதனை

டி20 கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன் விருதை வென்ற மூத்த இந்திய வீரர் பெருமையை தினேஷ் கார்த்திக் தக்கவைத்துள்ளார். 
ஆட்ட நாயகன் விருதை வென்ற மூத்த இந்திய வீரர்: தினேஷ் கார்த்திக் சாதனை

டி20 கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன் விருதை வென்ற மூத்த இந்திய வீரர் என்கிற சாதனையை தினேஷ் கார்த்திக் தக்கவைத்துள்ளார். 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தரோபாவில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 44 பந்துகளில் 64 ரன்களும் தினேஷ் கார்த்திக் 19 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் எடுத்தார்கள். 16-வது ஓவரின் முடிவில் ஜடேஜா ஆட்டமிழந்தபோது 6 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது இந்திய அணி. இதன்பிறகு தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் நல்ல ஸ்கோரை அடைந்தது.

மே.இ. தீவுகள் அணியில் ஒருவர் கூட 20 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. அர்ஷ்தீப் சிங், அஸ்வின், பிஸ்னாய் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஆட்ட நாயகன் விருதை தினேஷ் கார்த்திக் வென்றார்.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன் விருதை வென்ற மூத்த இந்திய வீரர் என்கிற சாதனையைத் தக்கவைத்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வென்றார் தினேஷ் கார்த்திக். அந்த ஆட்டத்தில் தனது முதல் டி20 அரை சதத்தை எடுத்த தினேஷ் கார்த்திக், 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். 37 வயதில் ஆட்ட நாயகன் விருதை வென்ற தினேஷ் கார்த்திக், இந்த விருதை வென்ற முதல் 35+ இந்திய வீரர். இதற்கு முன்பு 2021-ல் ரோஹித் சர்மா, 34 வருடங்கள், 216 நாள்களில் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அவருடைய சாதனையை தினேஷ் கார்த்திக் முறியடித்தார். தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகவும் ஆட்ட நாயகன் விருதை வென்று தனது சாதனையைத் தக்கவைத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com