
மே மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரருக்கான விருதை இலங்கை ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் பெற்றுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரா்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டு வருகிறது. இதன்படி மே மாதத்தில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
ஆடவர் பிரிவில் இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ், சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதைப் பெறும் முதல் இலங்கை வீரர். இந்த விருது ஜனவரி 2021 முதல் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரு சதங்களுடன் 344 ரன்கள் எடுத்தார் மேத்யூஸ். முதல் டெஸ்டில் 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதேபோல மகளிர் பிரிவில் பாகிஸ்தானின் இளம் சுழற்பந்து வீச்சாளர் துபா ஹசன், சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது முதல் தொடரில் இலங்கைக்கு எதிராக 5 விக்கெட்டுகள் எடுத்து தொடரின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.