டெஸ்ட் கலாச்சாரத்தை மீண்டும் கொண்டு வருவோம் : ஷகிப் அல் ஹசன்

டெஸ்ட் கலாச்சாரத்தை தங்கள் நாட்டுக்கு மீண்டும் கொண்டு வருவோம் என வங்கதேச டெஸ்ட் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

டெஸ்ட் கலாச்சாரத்தை தங்கள் நாட்டுக்கு மீண்டும் கொண்டு வருவோம் என வங்கதேச டெஸ்ட் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். 

மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக 0-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் வங்கதேச அணி தோல்வியுற்றது. இதைத் தொடர்ந்து கேப்டன் ஆல்ரவுண்டருமான  ஷகிப் அல் ஹசன் கூறியதாவது: 

தேநீர் இடைவேளை அல்லது உணவு இடைவேளைக்கு முன்பாகவே நாங்கள் விக்கெட்டுகளை இழப்பதுதான் தோல்விக்கான முக்கியமான காரணமாக இருக்கிறது. அதேசமயம் நாங்கள் விக்கெட் இழக்காமல் இருந்தால் வேறுமாதிரி நடந்திருக்கும். நாங்கள் நினைத்ததுப் போல வலுவாக விளையாடவில்லை. 

டெஸ்டில் நாங்கள் எல்லா துறைகளிலும் முன்னேற்றமடைய வேண்டும். அடுத்த டெஸ்ட் போட்டிக்கு இடையில் நீண்ட இடைவெளி இருப்பது நல்லதாக இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் விளையாட விருப்பம் இருப்பவர்கள் இந்த நேரத்தை உபயோகிக்க வேண்டும். நாங்கள் எங்களது நாட்டிற்கு டெஸ்ட் கலாச்சாரத்தை மீண்டும் கொண்டு வர விரும்புகிறோம். நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை மதிக்கவில்லையென நான் கூறவில்லை. அதேசமயம் நாங்கள் ஒழுங்காக விளையாடவில்லை என்பதை நினைவுறுத்துகிறேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com