ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாகிஸ்தானுடனான 3-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடும் 11 வீரர்கள் பெயரை ஆஸ்திரேலிய அணி வெளியிட்டுள்ளது.

News image
Updated On :20 மார்ச் 2022, 9:18 am

DIN


பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடும் 11 வீரர்கள் பெயரை ஆஸ்திரேலிய அணி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடைபெற்ற முதலிரண்டு டெஸ்ட் ஆட்டங்களும் டிராவில் முடிந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் லாகூரிலுள்ள கடாஃபி மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் இதுபற்றி பேசியதாவது:

"கடந்த ஆட்டத்தில் 11 வீரர்களும் விளையாடிய விதம் எனக்கு உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. நல்ல நிலையில் வர அவர்களுக்கு கூடுதலாக இரண்டு நாள்கள் வழங்கப்பட்டன. காயங்கள் பற்றிய பிரச்னை ஏதும் இல்லை. அனைவரும் புத்துணர்ச்சியுடனே உள்ளனர். எனவே, அதே 11 வீரர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

2 வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்டு மட்டும் விளையாடும்போது, ரிவர்ஸ் ஸ்விங்க் மிகப் பெரிய விஷயமாக இருக்கும். கடந்த ஆட்டத்தில் ஸ்டார்க் பிரமாதமாக விளையாடினார். ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலன்ட் போன்றோரை அணியில் சேர்க்காமல் இருப்பது எப்போதுமே கடினமானதுதான். ஆனால், இடதுகை பந்துவீச்சாளராக, காற்றில் கூடுதல் வேகமும் என ஸ்டார்க் வேறுபாடு கொண்டு வருகிறார். 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு அது சிறந்த வாய்ப்பாக நினைக்கிறோம்" என்றார்.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்வெப்சன், நாதன் லயான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.