பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை வென்று ஆஸ்திரேலியா சாதனை
3-வது டெஸ்டை 115 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி.


பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்டை 115 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட், லாகூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்களும் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 268 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 60 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. உஸ்மான் கவாஜா 104 ரன்களும் வார்னர் 51 ரன்களும் எடுத்தார்கள். இந்தத் தொடரில் 3 டெஸ்டுகளில் இரு சதங்கள், 2 அரை சதங்களுடன் 496 ரன்கள் எடுத்துள்ளார் கவாஜா.
3-வது டெஸ்டை வென்று தொடரைக் கைப்பற்ற பாகிஸ்தான் அணிக்கு 351 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை அடைய பாகிஸ்தான் அணிக்கு 121 ஓவர்கள் வழங்கப்பட்டுள்ளன.
4-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி 27 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்தார்கள். அப்துல்லா ஷஃபிக் 27, இமாம் உல் ஹக் 42 ரன்களும் எடுத்துக் களத்தில் இருந்தார்கள். கடைசி நாளில் பாகிஸ்தான் வெற்றி பெற 278 ரன்கள் தேவைப்பட்டன. ஆஸ்திரேலிய அணிக்கு 10 விக்கெட்டுகள் தேவை.
இதனால் கடைசி நாள் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஸி. அணி சிறப்பாகப் பந்துவீசி வெற்றியை நெருங்கியுள்ளது. ஷஃபிக் 27, அசார் அலி 17, ஃபஃபாத் அலாம் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். ரிஸ்வான் டக் அவுட் ஆனார். அவர் டிஆர்எஸ் முறையீடு கோரியிருந்தால் தப்பித்திருப்பார். இமாம் உல் ஹக் 70 ரன்களும் பாபர் ஆஸம் 55 ரன்களும் எடுத்தாலும் இதர பேட்டர்களின் ஆதரவு இல்லாததால் பாகிஸ்தான் தடுமாறியது.
பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்ஸில் 92.1 ஓவர்களில் 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லயன் 5, கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 3-வது டெஸ்டை 115 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா, டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியுள்ளது. 2016-க்குப் பிறகு முதல்முறையாக வெளிநாட்டில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. மேலும் ஆசியாவில் 2011-க்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளது.
ஆட்ட நாயகனான பேட் கம்மின்ஸும் தொடர் நாயகனாக உஸ்மான் கவாஜாவும் தேர்வானார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...