ஆஸி. முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ் மரணம்

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (46) கார் விபத்தில் உயிரிழந்தார்.
ஆஸி. முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ் மரணம்
Updated on
1 min read


ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (46) கார் விபத்தில் உயிரிழந்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்கள் ராட் மார்ஷ், ஷேன் வார்ன் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்த நிலையில், ஆண்ட்ரூ சைமண்ட்ஸும் உயிரிழந்திருப்பது கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குயின்ஸ்லாந்து காவல் துறை அறிக்கையின்படி, கார் விபத்தானது சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. விபத்து ஏற்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் விரைந்துள்ளது. எனினும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. காரில் அவர் மட்டுமே இருந்துள்ளார்.

சைமண்ட்ஸின் இழப்பு வேதனையளிப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் உலகம் இரங்கலைத் தெரிவித்து வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்காக 26 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியுள்ள சைமண்ட்ஸ் 1,462 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 40.61. பந்துவீச்சில் 24 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய இவர் 198 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 5,088 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 39.75. பந்துவீச்சில் 133 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

14 டி20 ஆட்டங்களில் விளையாடி 8 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் சராசரி 48.14 உடன் 337 ரன்கள் விளாசியுள்ளார் சைமண்ட்ஸ்.

பேட்டிங், பந்துவீச்சு மட்டுமின்றி பீல்டிங்கிலும் தலைசிறந்த வீரர் சைமண்ட்ஸ்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்காக சைமண்ட்ஸ் விளையாடியுள்ளார். இந்திய ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம்பிடித்த மற்றொரு ஆஸ்திரேலிய ஜாம்பவான் மறைந்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com