நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஜூனியர் ஹாக்கி: தில்லி, பஞ்சாப் வெற்றி

கோவில்பட்டியில் நடைபெறும் 12-ஆவது தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் புதன்கிழமை ஆட்டத்தில் தில்லி, பஞ்சாப், மணிப்பூர் அணிகள் வெற்றி பெற்றன.

News image
Updated On :18 மே 2022, 10:08 pm

DIN

கோவில்பட்டியில் நடைபெறும் 12-ஆவது தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் புதன்கிழமை ஆட்டத்தில் தில்லி, பஞ்சாப், மணிப்பூர் அணிகள் வெற்றி பெற்றன.
 போட்டியின் 2-ஆவது நாளான புதன்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தில்லி 7-2 என்ற கோல் கணக்கில் உத்தரகண்டை வென்றது. 2-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் 3-0 என்ற கணக்கில் ஆந்திர பிரதேசத்தை சாய்த்தது.
 மாலை 4 மணிக்கு நடைபெறவிருந்த 3-ஆவது ஆட்டத்தில் மகாராஷ்டிரம் - மிúஸாராம் அணிகள் மோதுவதாக இருந்தது. எனினும், மிúஸாராம் ஆட்டத்தில் பங்கேற்காததால் மகாராஷ்டிம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற 5-ஆவது ஆட்டத்தில் மணிப்பூர் 8-1 என்ற கணக்கில் திரிபுராவை தோற்கடித்தது.
 இன்றைய ஆட்டங்கள்: போட்டியின் 3-ஆவது நாளான வியாழக்கிழமை (மே 19) உத்தர பிரதேசம் - ஹிமாசல பிரதேசம், சண்டிகர் - மத்திய பிரதேசம், ஒடிஸா - ராஜஸ்தான், பிகார் - ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம் - அருணாசல பிரதேசம் அணிகள் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.