
பைஜுஸ் கல்வி நிறுவனத்தின் விளம்பரத் தூதராக கால்பந்து வீரர் மெஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார்.
இணையவழி கல்வி கற்பிக்கும் நிறுவனமான பைஜுஸ் 2011-ல் தொடங்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த பைஜு ரவீந்திரனால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
இந்நிலையில் ஆர்ஜெண்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி, பைஜுஸ் நிறுவனத்தின் சர்வதேச அளவிலான விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அனைவருக்குமான கல்வி என்கிற திட்டத்தின் தூதராக மெஸ்ஸி செயல்படுவார் என பைஜுஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கத்தாரில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியின் விளம்பரதாரராகவும் பைஜுஸ் நிறுவனம் செயல்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.