மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரர்!

உடல்நலக்குறைவு காரணமாகப் பிரபல மும்பை வீரர் சர்ஃபராஸ் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரர்!

உடல்நலக்குறைவு காரணமாகப் பிரபல மும்பை வீரர் சர்ஃபராஸ் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மும்பை அணியைச் சேர்ந்த சர்ஃபராஸ் கான் விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் விளையாடி வருகிறார். சர்வீசஸ் அணிக்கு எதிரான மும்பை அணியின் 2-வது ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. சிறுநீரகத்தில் கற்கள் உருவானதால் அதுதொடர்பான பாதிப்பினால் சமீபகாலமாக அவதிப்பட்டு வந்துள்ளார் சர்ஃபராஸ் கான். வலி அதிகமானதால் உடனடியாக ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மட்டும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்கிறார். வியாழன் அன்று மும்பை அணி தனது அடுத்த ஆட்டத்தில் விளையாடவுள்ளது. அந்த ஆட்டத்தில் சர்ஃபராஸ் கான் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது. 

இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் 6 ஆட்டங்களில் 4 சதங்கள், இரு அரை சதங்களுடன் 982 ரன்கள் எடுத்துள்ளார் 25 வயது சர்ஃபராஸ் கான். இதற்கு முன்பு 2019-20 ரஞ்சி கோப்பைப் போட்டியிலும் 900+ ரன்கள் எடுத்தார். ரஞ்சி கோப்பை வரலாற்றில் சர்ஃபராஸ் கான் உள்பட இதுவரை 3 பேட்டர் மட்டுமே இருமுறை 900 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்கள். இதனால் இந்திய அணியில் சர்ஃபராஸ் கானை சேர்க்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com