
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் 5 இன்னிங்ஸில் 3 அரை சதங்கள் அடித்த இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அவர் 239 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 189.68. டி20.
இந்த வருடம் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலும் அவர் தான் முதலிடத்தில் உள்ளார். 29 ஆட்டங்களில் 1040 ரன்கள். 1 சதம் மற்றும் 9 அரைசதங்கள். ஸ்டிரைக் ரேட் - 185.71.
2022-ல் டி20 கிரிக்கெட்டில் 6 முறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார் சூர்யகுமார். கோலியும் 2016-ல் 6 முறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார். இதனால் இன்று முதல் தொடங்கும் நியூசிலாந்து டி20 தொடரில் சூர்யகுமார் மேலும் ஒரு விருது வாங்கி கோலியைத் தாண்டிச் செல்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.