டேபிள் டென்னிஸ்: பதக்கம் வென்று இந்தியா வரலாற்றுச் சாதனை

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மனிகா பத்ரா சாதனை படைத்துள்ளார். 
மனிகா பத்ரா
மனிகா பத்ரா

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மனிகா பத்ரா சாதனை படைத்துள்ளார். 

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப்போட்டியில், இந்திய வீராங்கனை மனிகா பத்ரா, 3 முறை ஆசிய சாம்பியன் பட்டம் வென்றவரும், உலகின் 6ஆம் நிலை வீராங்கனையுமான ஹீனா ஹயாடாவை எதிர்கொண்டார். 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 11-6, 6-11, 11-7, 12-10, 4-11, 11-2 என்ற புள்ளிகள் கணக்கில் மனிகா வெற்றி பெற்றார். 

முன்னதாக நடைபெற்ற அரையிறுதியின் மற்றொரு போட்டியில், மியாமி இடோ வீராங்கனையுடன் போராடி தோல்வியுற்றார். எனினும் ஆசியக் கோப்பையில் மனிகா பத்ராவிற்கு வெண்கலப் பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி மகளிர் பிரிவில் அரையிறுதிக்குள் நுழைந்து இந்தியா பதக்கம் வெல்வது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com