
கடந்த அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 160 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கோலி 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 19-வது ஓவரின் கடைசி இரு பந்துகளில் கோலி அடித்த இரு சிக்ஸர்களை இந்திய ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது. அதுவும் 19.5 பந்தில் நேராக கோலி அடித்த சிக்ஸருக்கு வரலாற்றில் இடமுண்டு.
இந்நிலையில் அந்த ஆட்டம் பற்றி ட்வீட் வெளியிட்டுள்ளார் விராட் கோலி. அவர் கூறியதாவது:
2022, அக்டோபர் 23. என் இதயத்தில் இந்நாளுக்குச் சிறப்பு இடமுண்டு. ஒரு கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தளவுக்கான உற்சாகத்தை இதற்கு முன்பு கண்டதில்லை. என்ன ஓர் ஆசிர்வதிக்கப்பட்ட மாலை அது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.