இரானி கோப்பை: சாய் கிஷோருக்கு அணியில் இடமில்லை!

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் சாய் கிஷோருக்கு 11 பேருக்கான அணியில்...
இரானி கோப்பை: சாய் கிஷோருக்கு அணியில் இடமில்லை!

ராஜ்கோட்டில் அக்டோபர் 1-5 தேதிகளில் நடைபெறும் இரானி கோப்பைக்கான போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா - ரஞ்சி சாம்பியன் செளராஷ்டிரம் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இன்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் சாய் கிஷோருக்கு 11 பேருக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை. ஜெயிஸ்வால், பிரியங்க் பஞ்சல், சாய் கிஷோர் ஆகிய முக்கிய வீரர்கள் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இடம்பெறவில்லை. 

விஹாரி தலைமையிலான அணியில் ஸ்ரீகர் பரத், அபிமன்யு ஈஸ்வரன், மயங்க் அகர்வால், யாஷ் துல், சர்ஃபராஸ் கான், ஜெயந்த் யாதவ், செளரப் குமார், முகேஷ் குமார், குல்தீப் சென், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். 

டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. புஜாரா இடம்பெற்றிருந்த செளராஷ்டிரம் அணி 24.5 ஓவர்களில் 98 ரன்களுக்குச் சுருண்டது. முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளையும் குல்தீப் சென், உம்ரான் மாலிக் தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார்கள். புஜாரா 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com