ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பந்துவீச்சில் மிரட்டிய தென்னாப்பிரிக்கா: 133 ரன்களுக்கு கட்டுப்பட்டது இந்தியா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.

News image
Updated On :30 அக்டோபர் 2022, 1:30 pm

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா வென்றால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆனால் தென்னாப்பிரிக்கா அணி ஆரம்ப முதலே பந்துவீச்சில் மிரட்டியது. இதனால் இந்திய பேட்டர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். சூர்ய குமார் மட்டுமே இந்திய அணி கௌரமான ஸ்கோரை எட்ட உதவினார். சிறப்பாக விளையாடிய அவர் 40 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்க அணித் தரப்பில் லுங்கி இங்கிடி 4, பர்னல் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 3 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.