ரோகித் அதிரடி: இலங்கைக்கு 174 ரன்கள் இலக்கு 

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 173 ரன்களை எடுத்துள்ளது. 
ரோகித் அதிரடி: இலங்கைக்கு 174 ரன்கள் இலக்கு 

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 173 ரன்களை எடுத்துள்ளது. 

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இந்திய அணியில் விராட் கோலி 4 பந்துகளில் ரன்னேதும் எடுக்காமல் அவுட் ஆகினார். ரோகித் சர்மா 41 பந்துகளில் 72 ரன்களை எடுத்தார். சூர்ய குமார் யாதவ் 34 ரன்களும், பாண்டியா, ரிஷப் பந்த் தலா 17 ரன்களும், அஸ்வின் 7 பந்துகளில் 15 ரன்களும் எடுத்தார். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது இந்திய அணி. 

இலங்கை அணி சார்பில் மதுசனாகா 3 விக்கெட்டுகள், கருணாரத்னே, சனாகா தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com