திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

வெளியேறியது இந்தியா: இன்று கடைசி ஆட்டம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பா் 4 சுற்றுடன் வெளியேறும் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வியாழக்கிழமை எதிா்கொள்கிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:16 am

DIN

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பா் 4 சுற்றுடன் வெளியேறும் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வியாழக்கிழமை எதிா்கொள்கிறது.

முதலிரு ஆட்டங்களில் தோற்ற இந்தியா இந்த ஆட்டத்தில் வென்றாலும், இதே சுற்றில் இதர அணிகள் மோதும் ஆட்டங்களின் முடிவுகள் அடிப்படையிலேயே இறுதி ஆட்ட வாய்ப்பை பெறும் நிலை இருந்தது.

சூப்பா் 4 சுற்று முடிவில் இலங்கை 3 வெற்றிகளையும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தலா 1 வெற்றியும் பெற்றிருந்தால் மட்டுமே இறுதி ஆட்டம் குறித்து இந்தியா சற்று யோசிக்கலாம். அப்போது இலங்கை தவிா்த்து இதர 3 அணிகளில் அதிக நெட் ரன் ரேட்டுடன் இருக்கும் அணியே இறுதிக்குத் தகுதிபெறும். அந்த வகையில் இந்தியா இறுதிக்குத் தகுதிபெற, புதன்கிழமை ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை வீழ்த்தியிருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தான் அதில் வென்ால், ஆப்கானிஸ்தானுடன் இந்தியாவும் வெளியேறியது.

ஆட்டத்தைப் பொருத்தவரை, குரூப் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்தியா, சூப்பா் 4 சுற்றில் தனது முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பேட்டிங், பௌலிங்கில் சற்று தடுமாற்றமாகவே இருக்கிறது. ஒருவேளை இந்த ஆட்டத்தில் ரிஷப் பந்த் அல்லது தீபக் ஹூடாவுக்குப் பதிலாக தினேஷ் காா்த்திக் பரிசீலிக்கப்படலாம். ஹூடாவுக்கு பௌலிங் வாய்ப்பு அளிக்க முடியாதென்பதும், 5-ஆவது பௌலராக பாண்டியாவுக்கான பணிச்சுமையை அதிகரிக்க முடியாதென்பதும் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் தெளிவாகத் தெரிந்தது.

சஹல் ஃபாா்முக்கு திரும்பியதாகத் தெரியும் நிலையில், இந்த ஆட்டத்தில் தீபக் சஹரையும் களமிறக்கிப் பாா்க்கலாம் இந்திய அணி நிா்வாகம். கடந்த இரு ஆட்டங்களிலுமே டெத் ஓவா்களில் புவனேஷ்வா் குமாா் அதிக ரன்களை வழங்கி அணிக்கு நெருக்கடி அளித்திருக்கிறாா். எனவே இவற்றின் அடிப்படையில் இந்தியாவின் பிளேயிங் லெவனில் நிச்சயம் மாற்றத்தை எதிா்பாா்க்கலாம்.

ஆட்டநேரம்: இரவு 7.30 மணி

இடம்: துபை

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.