ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
டெர்பியில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார் மந்தனா. இதையடுத்து முதல்முறையாக டி20 தரவரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 3-வது இடத்தில் இருந்த மந்தனா, மெக் லேனிங்கைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 2-வது இடத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.
அதேபோல ஒருநாள் தரவரிசையில் 7-ம் இடத்துக்கு மந்தனா முன்னேறியுள்ளார். முதல் ஒருநாள் ஆட்டத்தில் 91 ரன்கள் எடுத்தார். இதனால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கெளர் 9-வது இடத்தில் உள்ளார்.
புதிய கிரிக்கெட் விதிமுறைகள்: ஐசிசி அறிவிப்பு
சச்சினின் 100 சதங்களை கோலி தாண்டுவாரா?: பாண்டிங் பதில்
இதையெல்லாம் யாரும் அலசுவதில்லை : கே.எல். ராகுல் ஆதங்கம்
எஸ்ஏ20: சூப்பர் கிங்ஸ் தேர்வு செய்த வீரர்களின் பட்டியல்!
தொடரும் சர்ச்சை: ஒரு நகர்த்தலில் ஆட்டத்திலிருந்து விலகிய கார்ல்சன்!
டிரா செய்த பிரக்ஞானந்தா: கைத்தட்டி பாராட்டிய கார்ல்சன்!
ஏலத்தில் யாரும் சீந்தாத தெ.ஆ. டி20 உலகக் கோப்பை கேப்டன்!