எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கடைசி டி20: ஆஸ்திரேலியா 186 ரன்கள் குவிப்பு

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. 

News image
Updated On :25 செப்டம்பர் 2022, 3:22 pm

DIN

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் டி20 தொடரின் 3-ஆவது மற்றும் இறுதி ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேமரூன் கிரீன், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். 

பிஞ்ச் 7 ரன்களில் வெளியேற அடுத்த வந்த ஸ்டீவன் சுமித் 9, மேக்ஸ்வெல் 6  ஆகியோரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதிரடியாக விளையாடிய கேமரூன் கிரீன் 21 பந்துகளில் 52 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஜோஷ் இங்லிஸ் தன் பங்கிற்கு 24 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் களமிறங்கிய டேனியல் சாம்ஸ், டிம் டேவிட் ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். 

எனினும் டிம் டேவிட் 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. டேனியல் சாம்ஸ் 28 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.