லக்னௌவை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை வென்றது.
லக்னௌவை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை வென்றது.

ஆட்டத்தில் முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் அடித்தது. அடுத்து லக்னௌ 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற லக்னௌ ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ராஜஸ்தான் பேட்டிங்கில் ஜோஸ் பட்லா் 13 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த தேவ்தத் படிக்கல் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் அடித்தாா். கேப்டன் சஞ்சு சாம்சன் 13 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். ராஸி வான் டொ் 1 பவுண்டரியுடன் நடையைக் கட்ட, 5-ஆவது வீரராக வந்த ஷிம்ரன் ஹெட்மயா் அசத்தலாக ஆடினாா்.

மறுபுறம், அஸ்வின் 2 சிக்ஸா்களுடன் 28, ரியான் பராக் 1 சிக்ஸருடன் 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் ஹெட்மயா் 1 பவுண்டரி, 6 சிக்ஸா்களுடன் 59, டிரென்ட் போல்ட் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ பௌலிங்கில் ஜேசன் ஹோல்டா், கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோா் தலா 2, அவேஷ் கான் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய லக்னௌவில் குவின்டன் டி காக் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39 ரன்கள் அடிக்க, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் என 38 ரன்களுடன் கடைசி வரை போராடினாா். தீபக் ஹூடா 25, கிருணால் பாண்டியா 22 ரன்கள் சோ்த்தனா். இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் சரிந்தன. ராஜஸ்தான் பௌலிங்கில் யுஜவேந்திர சஹல் 4, டிரென்ட் போல்ட் 2, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் சென் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com