கர்ப்பம்: அறிவித்தார் மரியா ஷரபோவா
By DIN | Published On : 20th April 2022 12:37 PM | Last Updated : 20th April 2022 12:37 PM | அ+அ அ- |

பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தன்னுடைய ரசிகர்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரும் பிரபல டென்னிஸ் வீராங்கனையுமான ரஷியாவைச் சேர்ந்த மரியா ஷரபோவா, சா்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தார். அப்போது அவருக்கு வயது 32. நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற 10 வீராங்கனைகளில் ஷரபோவாவும் ஒருவர். டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் 21 வாரங்கள் இருந்தார். 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் மகளிர் ஒற்றையர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அலெக்ஸாண்டர் கைக்ஸைக் காதலித்து வரும் ஷரபோவா, தனது 35-வது பிறந்த நாளன்று ரசிகர்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது முதல் குழந்தையை விரைவில் எதிர்பார்ப்பதாகக் கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து தொழிலதிபரான கைக்ஸும் ஷரபோவாவும் 2018 முதல் காதலித்து வருகிறார்கள். கடந்த வருட டிசம்பரில் தங்களுடைய திருமண நிச்சயதார்த்தம் பற்றி இருவரும் அறிவித்தார்கள்.